பாப்புலர் ஃப்ரண்ட்- மாவட்ட செயலாளர் S.இம்ரான் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்-நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலி முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் ஆரிப் வரவேற்புரை ஆற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தமிழ் மாநில செயலாளர் M.நாகூர் மீரான் அவர்கள் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு ‘இந்திய இறையாண்மையும் வழக்கறிஞர்களின் பங்கும் என்ற தலைப்பில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிகழ்வை மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் நெல்லை மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் முகம்மது ஷபி தொகுத்து வழங்கினார்.
நெல்லை மாவட்ட மூத்த வழக்கறிஞர்கள் முகம்மது உசேன்,பிரிட்டோ, அமல்ராஜ், பிராபகரன், வக்கீல் சங்க செயலாளர் செந்தில் உட்பட பல வழக்கறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.