• Wed. Apr 24th, 2024

ஸ்டேன்ஸ் பாதிரியாரின் அஸ்திக்கு திண்டுக்கல்லில் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Byadmin

Jul 28, 2021

ஜார்க்கெண்ட் மற்றும் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களுக்காக போராடியவர் ஸ்டேன்ஸ் பாதிரியார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வடமாநிலங்களில் உள்ள ஆதிவாசிகளுக்காக குரல் கொடுத்தார். பேசா சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று போராடிய காரணத்தால் அவரை ஒன்றிய பாஜக அரசு உபா சட்டத்தின் கைது செய்யப்பட்டார். 84 வயதான அவர் இச்சட்டத்தின் கொடும் நடவடிக்கை காரணமாக சிறையிலேயே இறந்து போனார். இச்சட்டத்தில் இறந்தவர்கள்; உடலை தர சட்டம் இடம் கொடுக்க அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவரது உடல் எரியூட்டப்பட்ட அஸ்தி வழங்கப்பட்டது. அந்த அஸ்தியை நாடு முழுவதும் பொதுமக்களின் அஞ்சலிக்காக எடுத்துச்செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில அஞ்சலி நிகழ்ச்சி காலை முதலே நடைபெற்று வருகிறது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, முனைவர் டேனிஸ் பொன்னையா, அருட்திரு சேசுராஜ், சகாயராஜ் அருட்சகோதரி லீமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காலையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்கசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகரச்செயலாளர் பி.ஆஸாத், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச்செயலாளர் கே.இராமகிருஸ்ணன், மாநில துணைத்தலைவர் வ.கல்யாணசுந்தரம், மாவட்டத்தலைவர் ஏ.அரபுமுகமது, மாநிலக்குழு உறுப்பினர் சூசைமேரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட நிர்வாகிகள் வருணன், டாக்டர் அமலாதேவி, கே.எஸ்.கணேசன், திருவருட்பேரவையின் சார்பாக நாட்டாமை காஜாமைதீன், ஜோதிமுருகன், மெர்சிசெந்தில்குமார், ஆகியோரும், திமுக சார்பாக நகரச்செயலாளர் ராஜப்பா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *