தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாஜக ஏஜெண்ட் போல் செயல்படுவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: திமுக அரசு எந்த திசையை நோக்கி செல்லவிருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் காண்பிக்கிறது என்றும், தமிழக பாஜக தலைவர் முருகன் எந்த யாத்திரை போனாலும் தமிழகத்தில் தாமரை மலராது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றும் விதமாக பெட்ரோல் விலையை குறைத்திருப்பது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கை என்ற கார்த்தி சிதம்பரம், பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைத்திருக்கும் செய்தி நாடு முழுவதும் சென்றடைந்து மற்ற மாநில அரசுகளுக்கு இரு ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படும் என பாராட்டினர். பாராளுமன்ற உறுப்பினர் நிதியை மத்திய அரசு நிறுத்தி இருந்த போதிலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதியை தமிழக அரசு கூட்டியுள்ளது என்றும் பாராட்டத்தக்கது என்றும் கூறினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் பாஜகவின் ஏஜெண்ட் போல் செயல்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.