• Sat. Apr 20th, 2024

கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் 62.14 அடியாக சரிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வைகை அணை 1958- ஆண்டு காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது .

இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் ,குடிநீருக்கும் பயன்படுகிறது .

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதால் முல்லைப்பெரியாற்றில் பெரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும்,கொட்டகுடி ஆற்றில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளதாலும் அணையின் நீர்மட்டம் இரண்டு மாதங்களாக 60 அடிக்கு மேல் சீராக நிலை நிறுத்தப்பட்டு இருந்தது .

இதனையடித்து 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.

அந்த அடிப்படையில் கடந்த மாதம் மேலூர் முதல் கள்ளந்திரி வரையிலான 45,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு அணையில் இருந்து 120 நாட்களுக்கு முறைவைத்து 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது .

இந்நிலையில் கடந்த மாதம் தேனி ,திண்டுக்கல் ,மதுரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 5ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது .71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 62 .14அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து 970 கன அடியாக இருப்பதால் 1819 வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் , வர இருக்கும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் பட்சத்தில், மேலும் தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *