• Sun. Apr 2nd, 2023

ஆணிப்படுக்கையின் மீது நின்றவாறு 11ம் வகுப்பு மாணவன் சாதனை!

By

Aug 28, 2021 , ,

விரகனூர் வேலம்மாள் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் G.கிர்த்திஷ் என்பவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்தி 12,800 ஆணிகள் கொண்ட ஆணிப்படுக்கையின் மீது ஏறி நின்றவாறு தொடர்ந்து 15 மணி நேரம் வாள் சுற்றி கிர்த்திஷ் உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளான ஆளவந்தார், சரவணன் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வை V.K.S மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர், சிலம்பம் பயிற்சி ஆசிரியர் சண்முகவேல் ஒருங்கிணைத்திருந்தார். உலக சாதனை படைத்த கிர்த்திஷ் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர். நிமலன் நீலமேகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *