• Thu. Apr 25th, 2024

செப்டம்ருக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி – மா.சுப்பிரமணியன்

செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதம் 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கும் நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நந்தனம் கல்லூரியில் புதிய பாட பிரிவு தொடங்கப்படமால் இருக்கிறது. அது மிகவும் அவசியம் என்று முதல்வர் தெரிவித்து இருந்தார். கூடுதல் பாடபிரிவு வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் 3 புதிய பாட பிரிவை தொடங்கி வைத்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 10க்கும் மேற்பட்ட பாட பிரிவு வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

ஆனால் கல்லூரியில் அந்த பாடப்பிரிவிற்கு அடிப்படை வசதிகள் செய்த பிறகு அடுத்த ஆண்டு பாடப்பிரிவை அதிகபடுத்துவதாக தெரிவித்து இருக்கிறோம். 90 % ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மேலும் இந்த மாதத்திற்கு 23 லட்சம் தடுப்பூசியை கூடுதலாக மத்திய அரசு வழங்கி உள்ளது. சென்னையில் உள்ள 112 அரசு மற்றும் தனியார் கல்லூரியிலும் தடுப்பூசி முகாம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை லயோலா கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க இருக்கிறேன். செப்டம்பரில் 100% 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்,’என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *