• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சரின் அறிவிப்பை கொண்டாடும் மகளிரணி..,

ByVelmurugan .M

Feb 13, 2026

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட மகளிரணி சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெடி,வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் பேருந்தில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், வேப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயப்பிரியா மணிவாசகம், சித்ரா சிவக்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, மற்றும்
பாத்திமா செல்வராஜ், அரும்பாவூர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.