• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் தியாகராஜன், சரவணன், தம்பா ஆகியோர் முன்னிலை வைத்தார். ஏ எம் கார்த்தி வரவேற்றார்.இந்த முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்ஆர்யா தலைமையில் செவிலியர்கள் முத்துலட்சுமி ராணி ஜெயராணி சவீதா ஜெயகர் ஆகியோர் 130 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இதில் 70 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.இதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஆட்டோ கண்ணன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை கராத்தே கணேசன் செய்திருந்தார்.