தேனி மாவட்ட சிவசேனா கட்சி அலுவலகத்தில் மகளிரணி இணையும் விழா மற்றும் ஒன்றிய மகளிரணி பொறுப்பேற்பு விழா நடந்தது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிவசேனா கட்சி அலுவலகம் உள்ளது. இன்று (ஜன.7) காலை 10.30 மணியளவில் இவ்வலுவலகத்தில் மகளிரணி இணையும் விழா மற்றும் மாவட்ட ஒன்றிய மகளிரணி பொறுப்பு அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் முருகவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குரு ஐயப்பன், துணை செயலாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி தலைவி கோகிலா வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.,
பொறுப்பாளர் ரவிக்குமார் சமூக விரோத கும்பலால் வெட்டப்பட்டார். தற்போது
ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் செல்வி லதா நன்றி கூறினார்.