மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீனதயாள் சேவை மையம் மற்றும் உலக கலை மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
கொரானாவிற்கு அடுத்தபடியாக லாக்டவுன் என்ற அடைப்பிலிருந்து வெளியே வந்து இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். எனக்கு தூத்துக்குடி, மதுரைக்கும் பெரிய இணைப்பு உள்ளது.
எனது அடிப்படை கல்வி ஆரம்பித்ததே மதுரையில் தான். மினாட்சியம்மன் கோவிலில் மா, பலா,வாழை வைத்து பூஜை செய்த பிறகே என்னை என் தந்தை பள்ளியில் சேர்த்தார். மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மனை தரிசிப்பது வழக்கம். ஆனால் கோவில்கள் திறக்கப்படவில்லை என கூறினார்கள்.
இங்கே நிர்வாக காரணங்களால் கோவில்கள் திறக்கவில்லை. அதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது.
சிலம்பம் என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் என் நினைவுக்கு வருவார். சிலம்பம் என்பதை மருத்துவராக நான் வரவேற்கிறேன். மனதிற்கும் உடலுக்கும் ஒருங்கிணைப்பை தருவது சிலம்பம். சிலம்பம் உடல்நலத்தை மட்டுமல்ல மனநலத்தையும் பாதுகாக்கிறது. மூளையின் சிந்திக்கும் திறனையும், மனதையும் சிலம்பம் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கிறது.
நமக்கு கொரானா பழையவற்றை மறந்துவிட வேண்டாம் என்பதை தான் சொல்லிக்கொடுத்தது. ஆயக்கலைகள் 64 ல் சிலம்பமும் ஒன்றாக உள்ளது.
தமிழகத்தில் தமிழர்கள் ஒரு பழக்கம் வைதுள்ளனர். சிலம்பத்திற்கான கம்பை தேர்ந்தெடுப்பதை ஒரு கலையாக வைத்துள்ளனர். சிலம்ப கம்பை தண்ணீரில் ஊற வைத்து பயன்படுத்துவர்.
இக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக நான் சொல்வது, எந்த பள்ளிக்கு சென்றாலும் கூறுவது தற்காப்புக்கலை சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்