• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…

BySeenu

Aug 14, 2026

கோவை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவேலுசாமி, அதிமுக சட்டமன்றக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜுனன், ஜெயராம் , அருண்குமார்,கந்தசாமி,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.