• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,

ByP.Thangapandi

Aug 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், மேகதாது மற்றும் காவேரி விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தவெக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய., ஆர்.பி.உதயக்குமார்.,

விவசாயிகளின் உரிமைகுரலுக்கு வழுசேர்க்கும் வகையில்
10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மா மற்றும் எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில்
12 கோடி விவசாயிகளுக்காக கொடுத்துள்ளோம்.,

நான் ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் தள்ளுபடி என்று சொன்னார் நம்ம மாமா முதல்வர் விஜய் அவர்கள், தமிழக விவசாயிகள் முதல்வரிடம் பிச்சை கேட்கவில்லை, சொன்ன வாக்குறுதி செய்யவில்லை, ஆட்சியை விட்டு ஓடி விடு என்கிறார்கள், முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் பயிர் கடன் தள்ளுபடி செய்வார்.,

ஆறு ஆறு சிலிண்டர் வீடு தேடி வரும் என்றார்கள் பட்ஜெட்டில் எதை மாற்றினார்களோ இல்லையோ பெயரை மட்டுமே மாற்றியுள்ளார்கள்.,

நாங்கள் ரியல்க்காக போராடுகிறோம், தவெக ரீல்ஸ்காக போராடுகிறது., அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக போராடும்.,

முப்பதாயிரம் கோடி மகளிர் உரிமைத்தொகை மாதாமாதம் கடன் வாங்காமல் அறிவித்து விடுவாரா முதல்வர், 2500 தர மாட்டார் ஏமாற்றுப் பேர்வழி,
பெண் போலீஸ்க்கு கூட பாதுகாப்பு இல்லாத தவெக அரசாக உள்ளது.,

2 வருட கட்சி எந்த கட்டமைப்பும் இல்லை, அதனால் அதிமுகவின் பிள்ளைகளை பிடிக்கிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள், பிள்ளை பிடிக்கிற வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் அதிமுக அழிக்கிற வேலையை, நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

விஜய் அதிமுகவை அழிக்க நினைத்தால், ஒன்று நாங்கள் அழிந்து விடுவோம், இல்லை நீங்கள் அழிந்து போவீர்கள், அதிமுக கடைசி தொண்டன் இருக்கும் வரை அதிமுகவை அழிக்க முடியாது., என பேசினார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.,

விவசாயிகளின் தோழனாக திகழ்ந்தவர் எம்ஜீஆர், அதனால் தான் மதுரையை தலைவர் நேசித்தார், அதையே தான் அம்மாவும் விரும்பினார்., வீரம் விளைந்த இந்த மண்ணிலிருந்து அரைகூவல் விடுகிறோம்., 25 ஆயிரம் கோடி வாங்கியுள்ளீர்கள், கூடுதலாக ஒரு 10 ஆயிரம் கோடி வாங்கி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்திருக்க கூடாதா., காவேரி பிரச்சனையாக இருந்தாலும், முல்லை பெரியாறு பிரச்சனையாக இருந்தாலும் ஆனித்தனமாக போராடியது அதிமுக.

மழை புயல் வறட்சி எது வந்தாலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தது அதிமுக ஆட்சி, இப்போது தான் வந்திருக்கீங்க., வந்தவுடன் முதல் கையெழுத்தாக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து கையெழுத்து போட்டிருக்கலாமே.

இப்படி ஒரு முதல்வரை வாழ்நாளில் சந்தித்தது இல்லை, சட்டமன்றம் மழலை பள்ளி கூடம் மாதிரி செயல்படுகிறது.

பகலில் தான் அமைச்சரவை நடக்கிறது, இரவில் தள்ளாடி கொண்டிருக்கிறது.,இரவுக்கு மேல் யாரும் முதல்வரை தொடர்பு கொள்ள முடியாது., தள்ளாடுகிற அரசாக உள்ளது., சட்டசபையில் நிர்வாக அமைப்பு இல்லை., கேள்வி கேட்டால் உடனடியாக பதில் சொல்ல எந்த திறனும் இல்லை.

திமுகவின் உழைப்பை பெட்டியை பெற்றுக் கொண்டு தவெகவிற்கு முட்டுக் கொடுக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்., இந்த கூட்ட தொடரிலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்., அவர்கள் கொடுத்த வாக்குறுதியை வழங்க வேண்டும்., அதையும் செய்யாமல் காலத்தை ஓட்டினால் அதிமுக சும்மா இருக்காது.

ரஜினி படத்தில் வருவது போல அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது போல எங்களது திட்டங்களை காப்பி அடித்து செயல்படுத்துறீங்க., வரவேற்கிறோம்., அதை வைத்து அதிமுக தொண்டனை ஈர்த்துவிடலாம் என எண்ணினால், என்ன தான் நாடகம் அடினாலும் அதிமுக தொண்டர்களை ஒருவரை கூட பிடிக்க முடியாது.

மதுரை என்றாலே மிதமான மழை இருக்கும், மிதமான வெயில் இருக்கும்., சாலையோர மரங்களை வெட்டியதால் இன்று வெயில் வாட்டி வதைக்கிறது., ஒவ்வொருவரும் நாம் இல்லத்தின் முன் மரம் வளர்க்க வேண்டும்., நமக்காக அல்ல வரும்கால சந்ததிக்காக, அதை உருவாக்கி கொடுக்க வேண்டும்., என அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்பு தாய்மார்களே நீங்க கூட விட்டுவிட்டீர்களே. வேதனையாக இருக்கிறது., என் தலைவன் நடித்த படத்தில் ஏதாவது ஆபாச காட்சி வருமா., விஜய் படத்தில் தான் எதுவும் செய்யவில்லை. நிஜத்திலாவது செய்யுங்கள், இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் வரும் அப்போதாவது மாத்தி போடுங்கப்பா., ரீல்ஸ் யை நம்பாதீங்க.,

திருத்திக் கொள்ள வேண்டும், படம் 100 நாள் ஓடுவது போல கட்சி, ஆட்சி 100 நாள் ஓட்டிவிட்டார்., நல்லதை செய்யுங்கள்., என பேசினார்.