தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று மட்டும் 32 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்ட மெகா முகாம்களில் 22,52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம், பல மையங்களில் இரவு 8.10 மணி வரை செயல்பட்டன. இதில் 11,50,351 பேருக்கு முதல் தவணையும், 11,290 பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டன.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரு லட்சத்து 63,884 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17,183 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் மூலம் இதுவரை நடத்தப்பட்ட 5 மெகா முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.
நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்றும், விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு மருத்துவத்துறை அறிவித்துள்ளது.