• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

வாயில் கருப்பு துணியுடன்; ம.நீ.ம., நிர்வாகிகள் மனு கொடுப்பு

கிராம சபையை போல, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதியில் வார்டு கமிட்டி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று (பிப்.28) காலை 11:00 மணியளவில் மக்கள் நீதி மய்ய கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் பலர் வாயில் கருப்பு துணி கட்டி, தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் நிறுவனருமான, கமல்ஹாசன் அறிவுரைப்படி, கிராம சபையை போல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வாயில் கருப்பு துணி கட்டி, தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனிடம், மாவட்ட செயலாளர் எம்.ஜி.ஐயப்பன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஏ.ஜி. அன்பு சுதாகர், தேனி நகர செயலாளர் பி. பெருமாள்,
தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன், பெரியகுளம் நகர செயலாளர் சரவணன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திருப்பதி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கணேசன், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆதி நாராயணன், சமூக ஊடக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதீப், வடபுதுபபட்டி சேகர், பெரியகுளம் குமரேசன், முருகன் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.