• Sat. Sep 23rd, 2023

இலங்கைக்கு ஏற்பட்ட நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படுமா..??

Byகாயத்ரி

Jun 4, 2022

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு கிட்டத்தட்ட திவாலாகி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இலங்கையை அடுத்து பாகிஸ்தான் நாடும் திவாலாகும் நிலையில் இருப்பதாக அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 30 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் 210 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் மக்கள் பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டதை கண்டித்து வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதோடு பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post

தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாட்டிற்கு தமிழரின் தொன்மைக்கு சான்றாய்த் திகழும் கீழடியில் இருந்து சுடரோட்டம் துவக்கம்…
விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *