• Fri. Apr 26th, 2024

எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்… கலைஞர் பிறந்தநாளில் அறிவிப்பு..

Byகாயத்ரி

Jun 4, 2022

தமிழக முதல்வர் ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞரின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம் சாகித்திய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்று அவர்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கும் திட்டம் என்ற கனவில் திட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கனவு இல்ல திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு ‘வணக்கம் வள்ளுவம்’ என்ற கவிதை நூலுக்கான சாகித்திய அகதமி விருது மற்றும் 2018 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினையும் பெற்ற ந.செகதீசன் என்கின்ற ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு சென்னை திருமங்கலத்தில் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் ‘கையொப்பம்’ என்ன கவிதை நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கின்ற சு.ஜகன்னாதன் அவர்களுக்கு கோவையில் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு சென்னையில் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பூமணி என்கின்ற பூ.மாணிக்கவாசகம் அவர்களுக்கு சென்னையில் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2014 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற கு.மோகனராசுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அண்ணாநகர் சாந்தி காலனியில் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு ‘செல்லாத பணம்’ என்னும் புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற இமயம் என்கின்ற வெ. அண்ணாமலைக்கு சென்னையில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 6 எழுத்தாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *