தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தால், மீண்டும் ரூ.60 ஆயிரத்தை நெருங்குமா என்கிற சந்தேகத்தை மக்கள் எழுப்புகிறது.
அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை காலத்தில், தங்கம் விலை உயர்வை கண்டது. தீபாவளி சீசன் விற்பனை முடிந்த நிலையில், தங்கம் விலையில் சரிவு ஏற்பட தொடங்கியது. ஆனால், இறங்கிய வேகத்தில் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.
நவ.,19ம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவ.,20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 7,115 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 56,920 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (நவ.,21) தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று (நவ.,22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனையாகிறது.