• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

நீலகரி -கண்டி கெச்சிகட்டி பழுதான சாலை சீர் செய்யப்படுமா ?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெச்சிகட்டி கண்டி முள்ளிமலை பூதியாட காந்திபுரம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கண்டி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தேயிலை தொழிற்சாலை பணிபுரிபவர்கள் தேயிலை பறிக்கச் செல்வோர் விவசாயிகள் என தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக கெச்சிகட்டி கண்டிசாலையை பயன்படுத்தி வருகின்றனர் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சாலையில் பயணித்த வருகின்றனர் சாலையானது போடப்பட்டிருந்த தார் சாலை பெயர்ந்து சிறு சிறு கற்கள் சிதறி கிடக்கின்றன.

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படுகின்றன குண்டும் குழியுமாகவும் சிதலமடைந்து கிடக்கும் சாலையை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்