இலங்கையில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை ராஜினாமா செய்ய உள்ளனர். என தகவல் வெளியாகிஉள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த் 2 மாதங்களாக பொதுமக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கை தலைநகர் கொழும்பில் காலிமுகத்திடலில் முகாமிட்டு இரவும் பகலுமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஒரே மாதத்தில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக இரண்டு முறை அவரச நிலை அமல்படுத்தபட்டள்ளது. எனினும் பொதுமக்கள் அவரசநிலையை பொருட்படுத்தாமல்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே ராஜபக்சே ராஜினாமா செய்வார் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. பின்பு மீண்டும் இது தவறான தகவல் என மறுப்பு செய்திகள் வரத்தொடங்கின.இலங்கை பொருளாதாரத்தைமீட்கும் வரை நான் ராஜினாமா செய்யமாட்டேன் என ராஜபக்சே பேட்டி அளித்தார்.
. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ராஜபக்சே உள்ளிட்டஅவரது அமைச்சரவை ராஜினாமாவைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைக்க உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை பத்திரிகையாளர்கள் கூறுகையில், மகிந்த ராஜபக்ச திங்கட்கிழமை பதவி விலகக் கூடும். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பார். தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் அரசு ஒன்றை அமைக்கத் தயாராக இல்லை. இந்த சூழலில் அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசு ஒன்றை அமைக்குமாறு அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அழைப்பார் என்கின்றனர்.