• Thu. Mar 28th, 2024

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பைக் டாக்ஸிகள்,வணிக நோக்கங்களுக்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் எஸ்.ஆர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் காட்வின் ஷட்ராக் தகவல் கேட்ட நிலையில்,போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி (PIO) உதவிச் செயலர் பதில் அளித்துள்ளார்.

இதனிடையே,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து வகையான இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இருப்பினும்,தமிழக அரசு இன்னும் பைக் டாக்ஸிகளை சட்டப்பூர்வமாக்கவில்லை.

ஆனால்,கடந்த 2021 ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ராபிடோ போன்ற பைக் டாக்ஸிகள் மாநிலத்தில் இயங்குகின்றன.மேலும்,பைக் டாக்ஸி மற்றும் கால் டாக்ஸிகள் போன்ற சேவைகளுக்கான விதிமுறைகளை மாநில அரசு உருவாக்கும் வரை அவர்களின் ரேபிடோ மொபைல் செயலி தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில்,டெலிவரி அல்லது வணிக நோக்கத்திற்காக, பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துவதற்கு போக்குவரத்துத் துறை அல்லது எந்தத் துறையிடமும் அனுமதி தேவையா என்ற ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு,அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று போக்குவரத்து ஆணையம் பதில் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed