

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்ய வராதது, ரசிகர்கள் மத்தியில் பல வியூகங்களை வகுத்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்., 19ம் தேதி நடைபெற்றது. அனைத்து தேர்தல்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறாமல் அதிகாலையிலேயே வாக்குப் பதிவு செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்ய வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பல விதமான கேள்விகளை எழுப்பிய நிலையில், பல வியூகங்களையும் வகுத்துள்ளது.
அதன்படி ரஜினிகாந்த் -க்கு அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்படுவதால் மருத்துவரின் ஆலோசனைப்படி, கொரோனா பரவல் காரணமாக வாக்களிக்க வராமல் இருக்கலாம் என்றும், தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த வருத்தம் இருப்பதால் இதன் காரணமாகவும் வாக்களிக்க வராமல் இருந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
