

இந்தியாவில் பிரபலமானவர் தேர்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர். மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு, ஆந்திரா, தெலங்கான, தமிழ்நாட்டில் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தேர்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதீஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட பிரசாந்த் கிஷோர், அக்கட்சியில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவா். பின்னா், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாஜகவுக்கு நிதீஷ் குமார் ஆதரவு அளித்ததால், அவரை பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக விமா்சிக்கத் தொடங்கினார்.
மேலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமா்சித்து வந்த பிரசாந்த் கிஷோர்பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பிற கட்சிகளுக்கு தோதல் வியூகம் வகுத்துக் கொடுத்தார். இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து அவா் நீக்கப்பட்டார்.
அண்மையில் கூட மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கினார்.
இந்தச் சூழலில் அவா் நிதீஷ் குமாரை சந்தித்திருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. ஆனாலும், அவா் ஐக்கிய ஜனதா தளத்தில் மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவலை நிதீஷ் குமார் மறுத்துள்ளார். அல்லது அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தனரா என்றும் பரபரப்பு தகவல் பரவி வருகிறது.