• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோலிசோடா 2.O-வில் இணையும் இயக்குனர் யார்?

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் “கோலி சோடா” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பாகத்தின் அளவிற்கு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், மீண்டும் இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடா 2.O என ஒரு வெப்சீரிஸ் இயக்கவுள்ளதாகவும், இந்த வெப் சீரிஸில் இயக்குனர் சேரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இயக்குனர் சேரன் இந்த வெப்தொடரில் நடிப்பது மட்டுமில்லாமல் மற்றோரு வெப் தொடரை இயக்கவும் உள்ளார். அவர் இயக்கும் அந்த வெப் தொடரில், பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.