தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வீடியோவுடன் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பு வீடியோ தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்னவென்றால், அந்த வீடியோ யூடியூபில் 4லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெளியான எந்த படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கும் இந்த அளவிற்கு லைக்குகள் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!