தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான ‘மாயோன்’ பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில், ”மாயோனே மணிவண்ணா..’ என தொடங்கும் பாடலில் ‘தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் ‘தாள் பணிந்தோம்’ என்பதற்கு பதிலாக ‘தாழ் பணிந்தோம்’ என்றிருக்கிறது. ‘தாள்’ என்பதன் பொருள் வேறு. ‘தாழ்’ என்பதன் பொருள் வேறு. பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி & காயத்ரியும் ‘தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள். ஆனால் லிரிகல் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், ‘தாழ் பணிந்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவுப்படுத்தவேண்டும்.” என குறிப்பிட்டனர்.தாள் பணிந்தோம்’ என்பதற்கு, ‘இறைவனின் பாதம் பணிந்தோம்’ என நேரடியான பொருளை வழங்குகிறது. ‘தாழ் பணிந்தோம்’ என்பதற்கு ‘தாழ்மையுடன் பணிந்தோம்’ என்ற பொருளை தருகிறது. இந்த துல்லியமான வேறுபாட்டால், இசை ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் விவாத பொருளாக மாற்றி வருகிறார்கள்.
இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், கதைச்சூழலின் படி தாள் பணிந்தோம்தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானது தான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது. இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டி காட்டியதை ஏற்றுக்கொண்டு, ‘தாள் பணிந்தோம்’ என லிரிக்கல் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ”என விளக்கமளித்திருக்கிறார்கள்.
தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான ‘மாயோன்’ பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில், ”மாயோனே மணிவண்ணா..’ என தொடங்கும் பாடலில் ‘தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் ‘தாள் பணிந்தோம்’ என்பதற்கு பதிலாக ‘தாழ் பணிந்தோம்’ என்றிருக்கிறது. ‘தாள்’ என்பதன் பொருள் வேறு. ‘தாழ்’ என்பதன் பொருள் வேறு. பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி & காயத்ரியும் ‘தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள்.
ஆனால் லிரிகல் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், ‘தாழ் பணிந்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவுப்படுத்தவேண்டும்.” என குறிப்பிட்டனர்.தாள் பணிந்தோம்’ என்பதற்கு, ‘இறைவனின் பாதம் பணிந்தோம்’ என நேரடியான பொருளை வழங்குகிறது.
‘தாழ் பணிந்தோம்’ என்பதற்கு ‘தாழ்மையுடன் பணிந்தோம்’ என்ற பொருளை தருகிறது. இந்த துல்லியமான வேறுபாட்டால், இசை ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் விவாத பொருளாக மாற்றி வருகிறார்கள்.இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், கதைச்சூழலின் படி தாள் பணிந்தோம்தாழ் பணிந்தோம்’
என இரண்டுமே பொருத்தமானது தான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது. இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டி காட்டியதை ஏற்றுக்கொண்டு, ‘தாள் பணிந்தோம்’ என லிரிக்கல் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ”என விளக்கமளித்திருக்கிறார்கள்.
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]
- தந்தை மறைவு அஜீத்குமார் வேண்டுகோள்தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக […]
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]