• Thu. Apr 25th, 2024

பும்ரா அணிக்கு திரும்புவது எப்போது..?
தேர்வுக்குழுத் தலைவர் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அணிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்,
இதன் காரணமாக, இந்திய அணி உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், பும்ரா விவகாரம் குறித்து தேர்வுக்குழுத் தங்களது தவறை ஒப்பு கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேத்தன் சர்மா, டி20 உலககோப்பை தொடரில் பும்ரா விளையாட வேண்டும் என்பதற்காக அவரை அவசரப்படுத்தினோம். காயத்திலிருந்து குணமடைந்த உடனே அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்தோம்.
இப்படி செய்ததால் தற்போது என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். டி20 உலககோப்பையில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் பும்ரா விசயத்தில் இனி பொறுமை காப்பது அவசியம். இதனால் தான் நியூசிலாந்து, வங்கதேச தொடரில் அவரை நாங்கள் பரிசீலிக்கவில்லை.
வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட பும்ரா உடல் தகுதியை பெறுவார் என நம்புகிறேன். ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக இந்திய அணியின் ஒரு பகுதியாக பும்ரா இருப்பார் என்று சேத்தன் சர்மா கூறினார். இதன் மூலம் பும்ரா விவகாரத்தில் தவறு செய்துவிட்டதை பிசிசிஐ ஒப்பு கொண்டுள்ளது.
இதனிடையே நியூசிலாந்து தொடரில் உம்ரான் மாலிக், குல்தீப் சென் போன்ற வேகப்பந்துவீச்சாளருக்கும், வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் யாஷ் தயால் போன்ற இளம் வீரர்களுக்கும் தேர்வுக்குழுவினர் வாய்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கு பதில், ஜூனியர்களுக்கு வழங்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *