

செல்ஃபி எடுப்பது தற்போது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. சினிமாவுக்கு போனால் செல்ஃபி,விசேஷவீட்டில் செல்ஃபி என எங்கும் எப்போது செல்ஃபி தான்.இந்நிலையில் பூமியில் மனிதன் எடுக்கும் கடைசி செல்ஃபி எப்படியிருக்கும் என பாருங்களேன்.
பூமியில் மனிதன் எடுக்கும் கடைசி செல்ஃபி புகைப்படங்கள் மிகவும் கொடூரமாக இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.டிக்டாக் செயலியில் ரோபட் ஓவர்லோட்ஸ் என்ற பெயர் கொண்ட கணக்காளர் ,செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)தொழில்நுட்பத்திடம் பூமியில் மனிதர்கள் எடுக்கும் கடைசி செல்ஃபிபுகைப்படங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அது வழங்கிய சில புகைப்படங்கள்தான் வீடியோவில் உள்ளன..
