

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ” அனைத்து உலக நாடுகளும் பாராட்டும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த முறையில் நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து.. செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலினின் செயல் பாராட்டுக்குரியது என்று ட்வீட் செய்துள்ளார்.
