
மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
மத்தியபிரதேசம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நோயாளிகள் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது தெரியவந்துள்ளது. 10 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.