• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் -கே டி ஆர்..,

ByK Kaliraj

May 3, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் கே. டி.ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜிக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்
கே. டி.ராஜேந்திர பாலாஜி நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் என்ன பிரதிபலிப்புகள் நாளை தெரியும் அதிமுக விற்கும் அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவும் அதிமுக கூட்டணியின் மாற்று அணியினருக்கு பாதகமாகவும் இருக்கும் என்று கூறினார்.

தற்பொழுது தொலைக் காட்சிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு அதிமுகவிற்கு பாதகமாக கருத்துக்கணிப்புகள் வெளியிடும் தொலைக்காட்சிகள் மற்றும் நிறுவனங்கள் எங்களை எதிர்த்து நிற்கும் கட்சிகளின் பினாமிகளின் நிறுவனங்களே ஆகும். அதிமுக கூட்டணியினருக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடும் நிறுவனங்கள் காலங்காலமாக தொடர்ந்து பல கருத்துக்களை கூறிய நிறுவனங்களாகும் ஆனால் திமுக வெற்றி பெறும் தவெக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறும் நிறுவனங்கள் புதிதாக களமிறங்கிய நிறுவனங்கள் ஆகும் என்று கூறினார்.

அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் அதற்காகவே வாக்களித்து விட்டார்கள் எனவே நாளை இரட்டை இலை ஜொலிக்கப் போகிறது அதிமுக வெற்றி பெறப் போகிறது என்றார்.

தொங்கு சட்டசபை அமைந்தால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழக மக்கள் அப்படி ஒரு வாய்ப்பை தர மாட்டார்கள் என்றும் அண்ணா திமுக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று அமோகமாக வெற்றி பெறும் என்றும் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக வருவார் என்றும் தெரிவித்தார்.