• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

போலி மருத்துவமனைக்கு சீல்.! போலி மருத்துவர் மீது வழக்கு..,

ByKalamegam Viswanathan

May 2, 2026

மதுரை மாவட்டமருத்துவ பணிகள் இணை இயக்குனர்செல்வராஜ் தலைமையில் வாடிப்பட்டி அரசு மருத்துவர் தனசேகரன் ,மருந்துகள் ஆய்வாளர் பாண்டி முனீஸ்வரி, மருந்தாளுநர் முத்துலட்சுமி ஆகியோர் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடீரென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த மருத்துவமனையில் நோயாளிக ளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டி ருந்த ஜெயா என்பவரிடம் கல்வித் தகுதியை கேட்டபோது பத்தாம் வகுப்பு படித்திருப்பதாக ஒப்புக்கொண்டார். பின் மருத்துவமனையை சோதனை செய்த போதுஆங்கில மருந்துகள் இருப்பது தெரியவந்தது.அதனால் அந்த மருத்துவமனையை மருத்துவ அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் தகுதி எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும் வகையில் மருத்துவ சிகிச்சை அளித்த ஜெயா மீது போலி மருத்துவர் என்று நடவடிக்கை எடுக்க கோரிவாடிப்பட்டி அரசுமருத்துவ மனை தலைமை மருத்துவ அதிகாரி தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில்வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.