• Sun. Sep 15th, 2024

நித்யானந்தாவுக்கு என்னதான் பிரச்சனை?

ByA.Tamilselvan

May 31, 2022

A.TAMILSELVAN

             இந்திய அளவில் சர்சைக்குரிய சாமியார் என்றால் நித்யானந்தா தான்.தமிழகம் குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.கைலாசா நாடு எங்குள்ளது என்பதே புதிராக தான் உள்ளது.

சமூக வலைதளங்களில் தினம் ஒரு வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். அவரது வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார்.அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவைP வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.சமாதி நிலை என்பது இறப்புக்கு பின் ஏற்படுவது என்பது தான் உண்மை .நித்யானந்த சொல்லும் சமாதி நிலை வேறுமாதிரியாக உள்ளது. உண்மையில் நித்யானந்தாவுக்கு என்னதான் பிரச்சனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *