புதுமை பெண் திட்டம் என்ன புதுமை படைக்கபோகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின்சார்பில் நேற்று நடந்த விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.”பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் விவசாயிகளை இந்த அரசு கையேந்த வைக்கிறது. அதை முதலில் சரிசெய்யாமல் “புதுமைபெண் ” என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது என்ன புதுமை படைக்கப்போகிறது என்றே தெரியவில்லை. கல்வியை முதலில் தரமாக கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
புதுமை பெண் திட்டம் என்ன புதுமையை படைக்கப்போகிறது? சீமான்
