• Sat. Sep 23rd, 2023

லண்டனில் மிடுக்கான தோற்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி…

Byகாயத்ரி

Sep 6, 2022

லண்டனில் நிறுவப்பட்டுள்ள கர்னல் பென்னி குயிக் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கோட் சூட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயதிற்கான தேவையை பூர்த்தி செய்ய தேனி அருகே கேரளாவில் முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் கட்டினார் கர்னல் ஜான் பென்னி குயிக். இவரை கவுரவப்படுத்தும் விதமாக ஆளும் திமுக சார்பில், லண்டனில் பென்னி குயிக் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக தமிழகம் சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் கோர்ட் சூட் என மிடுக்காக உடை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *