• Mon. Oct 7th, 2024

மக்களின் தேவை அறிந்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுகிறது – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் திரு K.ராமச்சந்திரன் கூறினார்.

இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 23 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை 149 மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் பல்வேறு உதவிகளை அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டத்திலுள்ள 5429 மாற்று திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதை தொடர்ந்து உதகமண்டல அரசு தமிழகம் மாளிகையில் தோட்டக்கலைத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
கூடுதல் ஆட்சியர் Dr. மோனிகா ராணா, தோட்டக்கலைத்துறை இணை இணை இயக்குநர் திரு சிவசுப்ரமணியம் சாம்ராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *