• Mon. Jan 20th, 2025

சித்த மருத்துவத்திற்கு நலவாரியம்

Byகுமார்

Dec 29, 2024

மதுரை சித்த வைத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு நலவாரியம் அமைக்க கோரி, பல்வேறு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் காந்திய அருங்காட்சியக வளாகத்தில் மதுரை சித்த வைத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சோலைமலை செவிலியர் டாக்டர். வரதராஜன் தலைமையிலும், மதுரை சித்த வைத்திய சங்கத்தின் தலைவர் அப்துல்ஜாபர் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளர்களாக குட்டலாடம்பட்டி ஸ்ரீரமணபிரஸனாந்தகிரி சுவாமிகள் மற்றும் தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் சென்னையின் செயலாளர் பாக்கம் தமிழன் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர்கள் செயலாளர் பொருளாளர் உட்பட 50க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் சோலைமலை, செவாலியர் டாக்டர் வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியது, சித்த மருத்துவத்திற்கு நல வாரியம் அமைக்க வேண்டும். சித்த மருத்துவர்கள் சுயதொழில் அடிப்படையில் சித்த மருத்துவம் செய்கிறார்கள். ஆகையால் சித்த மருத்துவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பதிவு வழங்க வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் செயல்பட வேண்டும். பள்ளிப் பாட புத்தகத்தில் சித்த மருத்துவத்தை பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும். ஆலயங்களில் உள்ள தலவிருட்சம் மரம் மருத்துவ குணம் கொண்டது. ஆகையால் ஆலயங்களில் சித்த மருத்துவ விற்பனை நிலையங்களை உருவாக்க வேண்டும். சித்த வைத்திய சங்கம் 98 ஆவது ஆண்டை தாண்டி நூற்றாண்டு விழா தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் கொண்டாடப்படும் என இவை உட்பட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது எனக் கூறினார்.