• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வருகை..,

ByKalamegam Viswanathan

May 6, 2026

ஜூம் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவை அதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் அறிவிப்பு வெளியிடுவார்..

பாஜக தமிழகத்திற்கு வரக்கூடாது என மக்கள் வாக்களித்துள்ளனர்.

நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தோல்வி குறித்து ?

முதலமைச்சர் தோல்வி என்பது வருத்தம் அளிக்கிறது..

காங்கிரஸ் தலைவர் தோல்விய நடந்திருக்கக்கூடாது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொருத்தவரை அது மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்க வேண்டும்

இருவரின் தோல்வி வருத்தம் அளிக்கிறது..

திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தீபம் ஏற்றுவோம் என கூறினார் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்..

மதவாதத்துடன் விலை போனதால் தோல்வியுற்றார்..

திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறுவது புலம்பல்.. வன்மத்தின் அடிப்படையில் உருவானது.

எங்களுடைய நோக்கம். தமிழகத்தில் பிஜேபி வரக்கூடாது..
மதவாதம் வளரக்கூடாது. இந்த மண் பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் க்கு எதிரான மண்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா இந்த கூட்டணி 2026 தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது தேர்தல் முடிந்துவிட்டது.. தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர்.

*ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்றுக் கொள்ளாது என சொன்னார்கள், தமிழக மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

தமிழகத்தில் திராவிட அரசியல் முடிவு பெற்றதா என்ற கேள்விக்கு ?

விஜய் பேசும் ஐடியாலஜி.. எம்ஜிஆர், கலைஞர் பேசிய அரசியல் தான் பேசுகிறார்..

மக்கள் மத வாதத்தை நிராகரிக்கிறார்கள்.. விஜய் பாஜகவிற்கு எதிராக நின்று வெற்றி பெற்றுள்ளார்..

தனக்கு கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு தட்டிவிடும் பழக்கம் கொண்டவர் திமுக சரவணன்.

இந்த சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு அரசுக்கும் எதிராக 15 அமைச்சர்கள் தோல்வி விட்டுள்ளனர்.

நாங்களெல்லாம் அரசாங்கத்தில் இல்லை.. கூட்டணியில் இருந்தோம், அரசாங்க பார்க்கவில்லை.

அதிமுகவிற்கு எதிரான ஓட்டுக்காக தான் பார்க்கிறோம்.

கடந்த தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்த பாஜக இந்த முறை எண்ணிக்கை குறைந்து ஒன்றாக மாறியுள்ளது..

மாணிக்கம் தாகூர் கூறினர்