• Fri. Jan 17th, 2025

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ByKalamegam Viswanathan

Dec 29, 2024

மதுரை மாநகர் 60-வது வட்ட கழகம் சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் 5ம் பகுதிக்கு உட்பட்ட 60-வது வட்டக் கழகம் சார்பில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 60வது வட்டக் கழக செயலாளர் போட்டோ பாண்டி தலைமையில், அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுரு படத்திற்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு 60-வது வட்டக் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேமுதிக நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.