• Wed. Oct 16th, 2024

செல்வம் இரட்டிப்பாக… வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டியது…

செல்வம் பலமடங்கு பெருகவும், சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும்., எப்போதும் செல்வம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய பூஜை குறித்து ஒரு தகவல்..

குபேர விளக்கு பூஜை வழிபாடு :
செல்வச் செழிப்பான கடவுள் குபேர கடவுள். மற்ற கடவுள்களின் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து இரட்டிப்பாக பெருக்கி கொடுப்பவர். நம்மிடம் செல்வம் பெருக செய்ய வேண்டியது, மகாலட்சுமி குபேர விளக்கு பூஜை வழிபாடு.

குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில், இந்த விளக்கு பூஜையை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு குபேர விளக்கை பயன்படுத்த வேண்டும். குபேர விளக்கு இல்லையெனில், அகல் விளக்கில் விளக்கை ஏற்றி இந்த பூஜையை பின்பற்றலாம். குபேரருக்கு உகந்த திசை வடக்கு. ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றினால் அது மிகவும் விசேஷம்.

முதலில் குபேர விளக்கிற்கும், குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டிற்கு ஒற்றைப்படையில் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு மகாலட்சுமியின் அம்சமான பச்சரிசியை வைக்க வேண்டும். குபேரருக்கு விசேஷமான எண் 5. எனவே ஐந்து ரூபாய் நாணயத்தை பச்சரிசியில் வைக்க வேண்டும். குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறத்தில் உள்ள திரியால் குபேர விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்த பயனளிக்கும்.

பச்சை நிற திரி இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்க்க வேண்டும். கற்கண்டு சேர்ப்பதனால் பணவரவு அதிகரிக்கும். விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். குபேர விளக்கை ஏற்றிய பின்னர் வீட்டின் நிலை வாசலில் இடதுபுறம் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வடக்கு திசை தெரியவில்லை எனில் கிழக்கு நோக்கியும் ஏற்றலாம். கிழக்கு திசை சூரிய பகவானுக்கு உகந்த திசை.

நிலை வாசலில் விளக்கு..
குபேரர் மற்ற கடவுளின் செல்வங்களுக்கு எல்லாம் பாதுகாவலர். அவரை வாசலில் வைத்து பூஜித்தால் செல்வத்திற்கும் பாதுகாவலாக இருப்பார். விளக்கை ஏற்றும்போது குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு ஏற்றினால் மிகவும் நல்லது.

‘ஸ்ரீமகாலட்சுமி குபேராய நமஹ” எனும் குபேர மந்திரத்தை மனதில் பக்தியுடன் உச்சரித்து கொண்டே இந்த விளக்கை ஏற்றி வர குடும்பத்தில் பணம் செழிப்புடன் வந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வர வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *