• Fri. Mar 29th, 2024

கற்பனை கதையா அட்லாண்டிஸ்..? மறைந்திருக்கும் ரகசியங்கள் …

Byகாயத்ரி

Mar 21, 2022

பண்டைய காலம் முதல் இந்த நாள் நாம் இதுவரை நிறைய நகரங்களை பார்த்திருப்போம் அதைபற்றி பல கட்டு கதைகளையும் சில உண்மை கதைகளையும் கேள்விபட்டிருப்போம். ஆனால் நம்மால் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மர்மம் நிறைந்தகடலுக்கு அடியில் காணப்படும் நகரம் தான் இந்த அட்லாண்டிஸ்.

இந்த அட்லாண்டிஸ் நகரை பற்றி முதன்முதலில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பிளேடோ என்ற கிரேக்க தத்துவியலாளர் ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகிறார் . இந்த நகரத்தில் மனிதர்களும் கடவுள்களும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்றும் உலகின் மிகப்பெரிய செல்வமிக்க நகரமாகவும் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார் .

கிரேக்க நீர் கடவுளான பொசைடன் முதன் முதலில் அட்லாண்டிஸ் நகரத்திற்கு வருகிறார். அப்பொழுது அந்த அட்லாண்டிஸ் நகரத்தை பார்க்கும்பொழுது அங்கு ஒரு பெண் மீது காதல் கொண்ட நீர் கடவுளான பொசைடன் தன் முதல் மனைவியை கைவிட்டு அவரை இரண்டாவதாக திருமணமும் செய்துகொள்கிறார். பிறகு அந்த நகரத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய வீட்டையும் அமைக்கிறார் . இந்த வீட்டை சுற்றி தண்ணீராலேயே பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்துகிறார். பொசைடனுக்கும் அவருடைய இரண்டாவது மனைவிக்கும் 10 குழந்தைகள் பிறக்கின்றன அதில் ஒருவர் தான் இந்த அட்லஸ், சிறிது காலம் கழித்து பொசைடனும் விண்ணுலகம் நோக்கி சென்றதால் அந்த மொத்த அட்லாண்டிஸ் நகரத்திற்கு அட்லஸ் மன்னன் ஆகிறான்.

அட்லஸ் மன்னாகிய பிறகு தந்தை பொசைடனுக்கு அட்லாண்டிஸ் நகரில் தங்கத்தால் ஆன ஒரு மிகப்பெரிய சிலையை நிறுவிகிறார் . அந்த சிலையை பார்பதற்காக வந்த கிறீஸ் நாட்டு மக்களிடம் தலைக்கணம் மிகுந்த அட்லாண்டிஸ் மக்கள் நாங்கள் கடவுள் போன்றவர்கள் என்று கூறி கிறீஸ் நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தால் மிகவும் கோபமடைந்த நீர் கடவுள் பொசைடன் அந்த அட்லாண்டிஸ் நகரம் முழுவதையும் நீருக்கடியில் மூழ்கடிக்க செய்கிறார். இப்படிதான் பிளேடோ அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுருப்பார். இதிலிருந்து பிளேடோ நம்மிடம் கூறுவது என்னதான் கடவுளாக இருந்தாலும் தலைக்கணம் கர்வம் வந்தால் அவர்கள் வீழ்த்தபடுவார்கள் என்பதுதான்.

இவ்வாறு புனைக்கதைகளில் கூறப்பட்ட இந்த அட்லாண்டிஸ் நகரம் தற்போது பெர்முடா முக்கோணத்தின் கீழே இருக்கிறது என்று ஒரு சில மக்களால் கூறப்படுகிறது . பெர்முடா முக்கோணத்தில் ஏற்படும் அனைத்து மர்மங்களுக்கும் இதுதான் காரணம் என்றும் நம்பப்படுகிறது. மற்றொரு மக்கள் தற்போதுள்ள பனிகண்டமான அண்டார்டிகா தான் அட்லாண்டிஸ் என்றும் காலபோக்கில் அட்லாண்டிஸ் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அட்லாண்டிஸ் நகரம் இருப்பதற்கான எம்த சான்றுகளும் இல்லை. இது த பிளேடோவால் உருவாக்கபட்ட கற்பனை கதை மட்டுமே தவிர வேறொன்றும் கிடையாது. இப்படி ஒரு மர்மாகவே இருந்து வரும் இந்த அட்லாண்டிஸ் அறியப்படாத ரகசியமாகவே இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *