• Wed. Apr 24th, 2024

வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

குலுக்கல் முறையில் வெற்றி!
திருநெல்வேலி, பணகுடி பேரூராட்சி, 4 ஆவது வார்டில் அதிமுக, பாஜக வேப்டாளர்கள் சமமாக வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை!
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் தாமதம். 1 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் 1 ஆவது வார்டில் விசிக வெற்றி
கடலூர் மாநகராட்சி 1வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார்.

மாநகராட்சி வார்டு வெற்றி நிலவரம்
மாநகராட்சியில் தற்போது வரை 24 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. 2 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் சுயேட்சையும் வெற்றிப்பெற்றுள்ளது

பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!
கோவை மாவட்டம் பெரியநெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8-ல் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடக்கம்
தபால் வாக்குகளை தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

போடியில் அதிமுகவினர் ரகளையால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதிமுகவினர் திடீர் ரகளையால் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது!

சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்
கடலூரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சாவி தொலைந்ததால், 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக முகவர்கள் காத்திருந்து பின்னர் தொடங்கப்பட்டது! சென்னை, எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை உதகை நகராட்சியின் 36 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தாமதம்

சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைப்பு
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோயில் தனியார் கல்லூரியில் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 218 பேர் போட்டியின்றி தேர்வு
தமிழகத்தில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *