

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி
திமுக – அதிமுக – பாஜக இடையே போட்டி நிலவி வந்தாலும், புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றிபெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது!.
