
சென்னை அருகே அமையவுள்ள புதிய விமானநிலையம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
சென்னையை அடுத்த பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை 12 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.விமான நிலையத்துக்காக 4750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு.பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 மணிநேரத்திற்கு மேலாகியும் அமைச்சர்கள் வராததால் கிராம மக்கள் கோபமடைந்து கூட்டத்தை புறக்கணித்தனர்.
