• Tue. Oct 8th, 2024

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 39-வது நாளாக தடை

ByA.Tamilselvan

Aug 17, 2022

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 39-வது நாளாக தடை விதித்துள்ளது.
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 39-வது நாளாக தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *