• Sat. Feb 24th, 2024

நாட்டின் சுதந்திர தியாகிகளை புகழ்ந்து பேசிய சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி…

Byகாயத்ரி

Aug 17, 2022

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு S. தங்கப்பழம் கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்றார்.

சுப்ரமணிய நாடார் வடிவு அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ், S. தங்கப்பழம் கல்வி குழுமத்தினரால் நடத்தப்பட்டு வரும், வாசுதேவநல்லூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இயற்கை மருத்துவம் யோகா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும், சிறப்புமிகு இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவிற்கு விருந்தினராக புவியியல் பேராசிரியர், முதுமுனைவர், அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்றார். 75 ஆவது சுதந்திர தினத்தில், கலந்த கொண்ட S. தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் செயலாளர் S.T. முருகேசன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். தேசிய மாணவர் படையின் அணிவகுப்பை ஏற்று பின்பு தேசிய மூவர்ண கொடியை ஏற்றி சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றியும் அவர்கள் செய்த தியாகங்கள் பற்றியும் மாணவர்கள் இடையே விரிவாகப் பேசினார் அழகுராஜா பழனிச்சாமி.

இதில் எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் கல்லூரிகளான பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் இயற்கை மருத்துவம் யோகா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் சிறப்பு விருந்தினரான அழகுராஜா அவர்களின் கடந்த பாதையே பற்றி மாணவ, மாணவிகளிடையே பேசினார். இதில் இரண்டு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுமுனைவர், அழகுராஜா பழனிச்சாமி பேசியாதாவது, இந்த தென்காசி மாவட்டமானது மாவீரன் பூலித்தேவன், மாவீரன் போர்படை தளபதி வெண்ணி காலாடி மற்றும் வீர வாஞ்சிநாதன் ஆகியோர் பிறந்த புண்ணிய பூமி .ஆங்கிலயேரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது எதிர்த்து நின்று போரிட்டு மடிந்த வீர மன்னர்களின் பூமி இது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒருங்கிணைந்த நெல்லை சீமையின் பங்கு அளப்பரியது. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்றோர் வாழ்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய போர் களம் நெல்லை சீமை என்றால் மறுக்க இயலாது. 1908ல் வ.உ சியும் விபின் சந்திரபாலும் திருநெல்வேலி எழுச்சி என்று மாபெரும் போராட்டத்தை நடத்தியதை உலகம் அறியும். இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவத்தை தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த காட்டியவர் கோமதிநாயகம் புளியங்குடி போன்றவர்கள் வாழ்ந்த ஊர் இது.

1767 ல் ஆங்கிலேயர் நெற்கட்டான் சேவல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே பிடிக்க கூடிய படையுடன் வந்து போரிட்டர். ஆங்கிலேயர் வாசுதேவநல்லூர் கோட்டையே தாக்கினர்.பூலித்தேவரும், மாவீரன் போர்படை தளபதி வெண்ணி காலாடி மற்றும் ஒண்டி விரன் மக்களை கோட்டையயும் காத்தார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு வரி அளிக்க இயலாது எனக்கூறி எதிர்த்து நின்று வாதிட்டு போர் புரிந்து 1799ல் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பப்பட்டார். மாகவி பாரதியார் நெல்லைச் சீமையில் பிறந்து வெள்ளையனை வெளியேற்றும் சுதந்திரப் போராட்டத்தில் தனது பாடல் வரிகளால் போர்களப் பாதை அமைத்தவர். தென்னிந்திய பாளையக்கரரான ஊமைத்துறை ஆங்கிலேயரிடம் எதிர்த்து போரிட்டு பாளையங்கோட்டை சிறையில் 18 மாதம் அடைக்கப்பட்டார்.

1911ல் வீரன் வாஞ்சிநாதன் ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிராக அப்போதைய ஆட்சியரை கொன்று தன் இன்னுயிர் ஈந்தார். இவ்வாறு வீரமும், ஈரமும் நிறைந்த பூமி நெல்லைச் சீமை ஆகும். இன்று 75 ஆண்டுள் சுதந்திரம் பெற்று அமுதப் பெருவிழா கொண்டாடும் மாணவச் செல்வங்கள் சாதி சமைய பேதமை அற்ற ஆண் பெண் வேறுபாடற்ற பொருளாதார ஏற்ற தாழ்வு அற்ற, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி நபர் ஒருவரின் கல்வி, ஒழுக்கம், அவற்றுடன் கூடிய சமுதாய , பொருளாதார , அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியில் இருக்கிறது. இதற்கு தான். வள்ளுவர் தம் குறளில் ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து என்றார். நாட்டின் வளர்ச்சி என்பது ஒவ்வொருவரின் கல்வி வளர்ச்சி ஆகும். கற்றல் என்பது திறம்பட கற்று தேர்தல், தெளிதல் மற்றும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயன்படுத்துதல் கல்வி என்ற அழிவில்லாத செல்வத்தை வழங்கி வரும் கல்லூரி நிர்வாகத்தார். இதனை கற்று உயர காத்திருக்கும் மாணவ மாணவியர், கலங்கரை விளக்கமாய் திகழும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். தங்களது இறுதி நாள் மூச்சு வரை உடல், பொருள், ஆவி. இவற்றை இழந்து இந்நாட்டின் சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டு அதற்காக போராடி ஈட்டிய மாவீரர்களின் தியாகங்கள் மக்கள் மனதில் போற்றுதலுக்குரியது நாமும் நம் அடுத்த தலமுறையினரும் சுதந்திரத்தை பேணி காப்போம் . வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என்று கூறி தன் உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *