

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் விழுப்பனூர் கிராம ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் எஸ் தமிழ்ச்செல்வன் ,துணைத்தலைவர் ஜெ.பொன்னுத்தாய் ஆகியோர்தலைமை வகித்தனர்.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஐஐ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை – உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண் மற்றும் விவசாயிகள் கடன் அட்டை உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட உதவிதிட்ட அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி,வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டாரஊராட்சி ,ஊராட்சி செயலாளர் ஏ.பொன்னுச்சாமி உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

