

சிவகாசியில், முத்துராமலிங்க நகரில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயிலில், பூக்குழி மற்றும் பால் குடத்திருவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்..

மேலும் இந்நிகழ்வின்போது, சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தங்கல் மேற்கு பகுதி கழக செயலாளர் சரவணக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவருமான லயன் லட்சுமிநாராயணன் செய்திருந்தார்…

