• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..

ByKalamegam Viswanathan

Feb 7, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – திருத்தங்கல் சாலையில் பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடித்துவிட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில், செய்யது அபுதாகிர் கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேஜையில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செல்போன்களும் திருடு போனதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.