• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

ByKalamegam Viswanathan

Feb 18, 2026

சீட்ஸ் மற்றும் மிஷின் சம்ரிதி மூலம் காலநிலை ஆபத்து தகவல் அடிப்படையிலான திட்டமிடல் மூலம் அமைப்புசார் மாற்றத்துடன் பேரிடர் தடுப்புத் திறன் மேலாண்மை திட்டத்தின் காரியாபட்டியில் உள்ள 25 ஊராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, ஆண்டு முழுவதும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில் “ஒருங்கிணைந்த பண்ணையம்” குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சியில், பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, நாட்டுக்கோழி, மீன்வளம், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. ஒரு பகுதியின் கழிவுகளை மற்றொரு பகுதியின் வளமாக மாற்றி பயன்படுத்தும் நடைமுறை (Integrated Farming System) மூலம் செலவை குறைத்து அதிக வருமானம் பெறலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பால் மாடு மற்றும் ஆடு வளர்ப்பு, அசோலா தயாரிப்பு, கம்போஸ்ட் மற்றும் வெர்மி கம்போஸ்ட் உரம் தயாரித்தல், பண்ணைக் குளம் அமைத்து மீன் வளர்ப்பு போன்ற தலைப்புகளில் நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பால் மற்றும் காய்கறிகளுக்கு மதிப்பூட்டல் செய்து நேரடி சந்தை வாயிலாக விற்பனை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பயிற்சியில் காரியாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 25 ஊராட்சிகளை சேர்ந்த பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பயன்படுத்தி குறைந்த நிலப்பரப்பிலும் அதிக வருமானம் ஈட்ட முடியும் என பயிற்சி வழங்குநர்கள் நல்ல குரும்பன், ஷீபா, ஐடாகவிதா, சுதின், ஜீவா ஆகியோர். வலியுறுத்தினர்.

இதில் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் ராமசுப்பிரமணியன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரன், பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் விஜய், அழகு சித்ரா, மீனாள் சுந்தரி , முத்துபிரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.