• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொடுத்தவர்களே பறித்து கொண்டார்கள்..,

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் உரையாற்றி பேசிய போது, “மகளிர் உரிமை தொகை ரூபாய் ஐந்தாயிரம், பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் பெற்றுள்ளது என்று நாளிதழ் ஒன்றில் செய்தியாக வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பொது மக்கள் சிலரிடம் விசாரித்தபோது, ரத்னா(பெயர் மாற்றம்) என்ன கொடுத்து என்ன செய்ய சிலிண்டர், பால், கரண்ட் பில் என்று அனைத்து ரூபாயும் போய் விட்டது. இவர்கள் கொடுப்பது போல் கொடுத்து விட்டு அனைத்தையும் பறித்து விட்டார்கள், இதேபோல் மகளிர் உரிமை தொகை மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். கொத்தனார் ராஜு கூறுகையில், அரசு கஜானாவில் இருந்து தான் கொடுத்தார்கள், இவர்கள் கையிலிருந்து எடுத்துக் கொடுத்தது போல தினமும் விளம்பரம் செய்து வருகிறார்கள். இன்று கொடுத்து விட்டு நாளை வரி என்ற பெயரில் இதை விட அதிகமாக பறித்து கொள்வார்கள், எல்லாம் நம் தலையில் தான் வந்து விழும் என்று கூறினார். இவர்கள் மட்டும் அல்ல நாட்டில் பலரது எண்ணங்களும் இதே போல் தான் இருக்கிறது.